11 12 13 14 15
21 22 23 24 25
Home | About us | Reports | Sponsor a Child| Photos | Committee|Announcement |Contact| Links |
Documents
Sponsor a child in Sri Lanka for $23 per month
 
logo
 

 

 

Ceylon Students Educational Fund’s
27th Annual General Meeting  

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) அவுஸ்திரேலியா
ஆண்டறிக்கை (2015 – 2016)

இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின்  உறுப்பினர்கள்,   நிதியத்தின்  நலன் விரும்பிகள்   அனைவருக்கும்  வணக்கம்.

எமது  கல்வி   நிதியம்  28  ஆவது  ஆண்டில்  காலடி  எடுத்துவைக்கிறது.   தங்கள்  ஆதரவினால்  தொடர்ந்தும்   இயங்கும்  நிதியத்தின்   2015 - 2016  ஆம்  ஆண்டிற்கான அறிக்கையை   இங்கு   சமர்ப்பிக்கின்றோம்.

27வது ஆண்டுப் பொதுக்கூட்டம்
நிதியத்தின்  தலைவர்  திரு.  விமல் அரவிந்தன்  தலைமையில் 27  ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்    02-08-2015  ஆம்   திகதி    ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில் Vermont  South  Community  House           மண்டபத்தில்  நடைபெற்றது.  நிதியத்தின் அமைப்புவிதிகளின் பிரகாரம் 2014 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட  பரிபாலன சபை உறுப்பினர்களே மீண்டும் ஏகமனதாக தெரிவாகினர்.

பரிபாலன சபைக்கூட்டங்கள்
இக்காலப்பகுதியில்  6   பரிபாலன  சபைக்கூட்டங்கள்   நடந்துள்ளன.

நிதியத்தின்  நிரந்தரவைப்பு நிதி
நிதியம்   ஆரம்பிக்கப்பட்ட  காலத்தில்  சிட்னியில்  இயங்கிய தமிழர்களுக்கான    மனித  உரிமை   அமைப்பு  வழங்கிய $25,000 அவுஸ்திரேலியன்  வெள்ளிகள்  தொடர்ந்தும்  வங்கியில் நிரந்தரவைப்பிலிருக்கிறது.    பின்னர்  நிதியமும்  கடந்த  காலத்தில்  மேலும்  ஐந்து    ஆயிரம்  வெள்ளிகளை   சேமித்து  நிரந்தரவைப்பிலிட்டதை உறுப்பினர்கள்   நன்கறிவார்கள். கடந்த  2014   ஆம்  ஆண்டு  நடைபெற்ற  நிதியத்தின் (Silver Jubileeவெள்ளிவிழாவில்   திரட்டப்பட்ட  நிதியிலிருந்தும்  மேலும்  ஐந்தாயிரம் வெள்ளிகள் ($5,000)  நிரந்தர    வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்பொழுது   நிதியத்தின்  நிரந்தர  வைப்பில்  மொத்தம்  35 ஆயிரம் வெள்ளிகள் ($35,000)  இருப்பதை  உறுதிப்படுத்துகின்றோம்.  இந்த சேமிப்புக்கு  ஆதரவு  வழங்கிய  அனைவருக்கும்  நிதியத்தின் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

கண்காணிப்பாளர் ஓய்வு
கடந்த காலங்களில் எமது கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட மாணவர் கண்காணிப்பாளராக இயங்கிய திருமதி சிவமணி நற்குணசிங்கம் ( அதிபர் - பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம் - கல்முனை) அவர்கள் தமது அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். இதுவரைகாலமும் அவர்  எமது நிதியத்திற்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றியைத்தெரிவிக்கின்றோம். அவர் மேற்கொண்ட பணிகளை புதிய அதிபர் திரு. பிரணவசோதி கவனிக்கின்றார்.

திருமதி அருண். விஜயராணி மறைவு
எமது கல்வி  நிதியம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உறுப்பினராக இயங்கியவரும் 2014 - 2015  காலப்பகுதியில் நிதியத்தின் தலைவராக விளங்கியவருமான திருமதி அருண். விஜயராணி அவர்கள் 13-12-2015 ஆம் திகதி மறைந்தார். அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் நிதியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். திருமதி அருண். விஜயராணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது நிதியத்தின் அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம்.


Read annual report in full

 

Students who have completed their University education
and obtained employment

A number of students who were provided assistance by the Fund have completed their university education. Some of these students have also been successful in finding employment or received the opportunity to go overseas.

Read article

 

Report on activities of Ceylon Students Educational Fund in
Sri Lanka (Dec 2012 & Jan 2013)

This update reflects on the recent activities by Ceylon Students Educational Fund in the North and Eastern provinces of Sri Lanka and the Gambaha district. The Fund hosted a number of events and information sessions in the region and Assistant Treasurer Mr L. Murugapoopathy met with many of our war affected and displaced sponsored students and local facilitators.

Read English version
Read Tamil version

Meet the people on the ground

During December 2012 & January 2013, representatives of CSEF met with many students who are sponsored by us and the people on the ground who help us to make the difference in our communities. Read more…

CSEF Students in employment

Some of the CSEF sponsored students have graduated from university and have found employment. Here we meet four of the students. Read more..

 

CEYLON STUDENTS' EDUCATIONAL FUND (inc) AUSTRALIA
Bank Details

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன வாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

Designed and maintained by CSEF

Annual Reports
 
AGM Minutes
 
Archives